‘சின்ன சின்ன’ பாடல் வரிகள்| Chinna Chinna Song Lyrics in Tamil
தமிழ் வரிகள்:
பெண் : சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ
கருவறை மீண்டும் மணக்கிறதோ
எட்டு வைத்து வானம் வருகிறதோ
தித்திப்புயல் நெஞ்சில் மூழ்கிறதோ…
பெண் : கண்ணே இனி ஒரு போதும் பிரிவே இல்லை
பிஞ்சே நீ ஒரு கோடி தாயின் பிள்ளை…
பெண் : உறவெல்லாம் ஒன்றாக
விழியெல்லாம் தேனாக
இரவெல்லாம் தூளாக
பறவைக்கூட்டில் விண்மீன் பூக்க…
பெண் : வாராத மாமணியாய்
வந்தாயே உய்வாக
மனசெல்லாம் ஒளி வீச
உன் மீசை கூட மழலை பேச…
பெண் : சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ
கருவறை மீண்டும் மணக்கிறதோ
எட்டு வைத்து வானம் வருகிறதோ
தித்திப்புயல் நெஞ்சில் மூழ்கிறதோ…
ஆண் : மழை பொழிகிற இரண்டாம் நாளில்
விழும் துளியில் மாசில்லை
இது ஒரு வகை இரண்டாம் பிறவி
வாழ்வில் இனிமேல் குறையில்லை…
ஆண் : யுத்தம் புரிகிற மண்ணில் மண்ணில்
ரத்த பந்தம் போல் பலமில்லை
வா எழுந்திடு… வாள் சுழற்றிடு
வான் கிழித்திடு பயமில்லை…
ஆண் : கீச்சை மறந்துப்போன
கிளியின் மௌனம் போல
இதயம் தவித்த போது
நீ இசையாய் உள்ளே வந்தாயே…
ஆண் : உறவில்லாம் ஒன்றாக
விழியெல்லாம் தேனாக
இருளெல்லாம் தூளாக
பறவைக்கூட்டில் விண்மீன் பூக்க…
ஆண் : தோழி உனைப் பார்த்ததும்
நேற்றின் முகம் யோசனை
ரெட்டை ஜடை வாசனை
நீதானா நிஜம்தானா…
ஆண் : வயதின் முதல் காதலா
வார்த்தை இல்லா வெய்யிலா
சாட்சி இல்லா சாரலா
நீதானா நிஜம்தானா…
ஆண் : அடி ஏதும் அறியா என் நெஞ்சில்
இறகாக விழுந்தாயே
காலம் பருவம் கடந்தாலும்
கலையாமல் நின்றாயே…
ஆண் : போவோம் பல நாட்கள் பின்னே பின்னே…
வாழ்வோம் நாம் வளராத பிள்ளை போலே…
பெண் : சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ
கருவறை மீண்டும் மணக்கிறதோ
எட்டு வைத்து வானம் வருகிறதோ
தித்திப்புயல் நெஞ்சில் மூழ்கிறதோ….
பாடல் விவரம்:
திரைப்படம்: தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: தளபதி விஜய் மற்றும் ராஜா பவதாரணி
பாடலாசியர்: விவேக்.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…