தியாகத்தால் பெற்ற விடுதலை இது – முதல்வர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின விழா உரை

0
Chief Minister M. K. Stalin's Independence Day speech
Chief Minister M. K. Stalin's Independence Day speech

தியாகத்தால் பெற்ற விடுதலை இது – முதல்வர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின விழா உரை: இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி சிறப்பு உரையாற்றியுள்ளார். அவர் பேசியதாவது,

Chief Minister M. K. Stalin's Independence Day speech
Chief Minister M. K. Stalin’s Independence Day speech – முதல்வர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின விழா உரை
  • இந்திய சுதந்திரத்திற்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடு. பூலித்தேவன், மருதநாயகம், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார் உள்ளிட்டோரின் வீரமும், வ.உ.சி, பாரதியார், சுப்பிரமணிய சிவா ஆகியோரின் தியாகங்களும் போற்றத்தக்கது.
  • இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் 260 ஆண்டு தொடர் பங்களிப்பு குறித்து எதிர்காலம் இளம் சமுதாயம் அறிந்து கொள்ளும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விடுதலை நாள் அருங்காட்சியகம் சென்னையில் அமைக்கப்படும்.
  • அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 31%லிருந்து 34%ஆக உயர்வு.
  • வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக இல்லாமல், சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். மு.க.ஸ்டாலின் கடந்த ஓராண்டில் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சி, பல்துறை வளர்ச்சியாக இருக்கும்.
  • விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஒய்வூதியத்தொகை இன்று முதல் ரூ.18 ஆயிரத்திலிருந்து ரூ. 20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • கட்டணமில்லாப் பேருந்து வசதி மூலமாக பெண்களின் சமூகப் பங்களிப்பும், பொருளாதார விடுதலையும் அதிகமாகி இருக்கிறது; ஒராண்டு காலத்தில் 153 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது, தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெருகி இருக்கிறது.
  • ரூ 2,500 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகளை ஓர் ஆண்டில் மீட்டுள்ளோம், தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு தனிமனிதனின் கோரிக்கையையும் செயல்படுத்தித் தரும் மனிதனாக நான் இருக்க வேண்டும் ஆசைப்படுகிறேன்.
  • எளிமை, நேர்மை,ஒழுக்கம்,மனித நேயம், மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளமாக இருக்கிறார் அண்ணல் காந்தியடிகள். இன்றைக்கு நாட்டுக்கு அவசிய,அவசரமான கொள்கைகள் இவைதான்.
  • விடுதலை போராட்ட வீரர் மலையாள வெங்கிடுபதி எத்தலப்பருக்கு ரூ.2.6 கோடி மதிப்பில் திருப்பூரில் நினைவு மண்டபம் அமைக்கப்படும்.
  • தேசியக் கொடியின் நிறம் மூன்றாக இருந்தாலும், அவை ஒரே அளவில் இணைந்து காணப்படுகிறது பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும் இணைந்து வாழ்வதே இந்தியாவைக் காக்கும்.

இவ்வாறு உரையாற்றியுள்ளார்.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE