இனி விஜய் சேதுபதியுடன் படம் பண்ண முடியாது – சேரன் பேட்டி:
தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான சேரன், தற்போது சோனி லைவ் OTT நிறுவனத்திற்கு வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருகிறார். இதில் ஆரி, திவ்ய பாரதி, கலையரசன், பிரசன்னா ஆகியோர் நடித்து வருகின்றனர். வரும் செப்டம்பர் மாதம் இந்த வெப் சீரிஸ் வெளியாகவுள்ளது.


இதற்கிடையில் நீண்ட நாட்களாக விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை தான் இயக்கவுள்ளதாக சேரன் கூறியிருந்தார். நீண்ட வருடங்கள் ஆகியும் எந்தவொரு அப்டேட்டும் வரவில்லை. இந்நிலையில் சேரன் இதுக்குறித்து அளித்த பேட்டியன்றில், “இனி அந்த படம் பண்ண முடியாது. நிறைய காரணங்கள் இருக்கு. அவர் ரொம்ப உயர்ந்துவிட்டார். அவருக்காக கதை மாற்றப்படவேண்டும். மேலும், அவர் ரொம்ப பிசியாக இருக்கிறார். கண்டிப்பாக இன்னும் 10 வருஷத்துக்கு அவரது டேட் கிடைக்காது. அதனால் இப்போதையுக்கு அந்த படம் எடுக்க வாய்ப்பில்லை” என கொஞ்சம் காட்டமாக கூறியுள்ளார்.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண