மதுரை, கோவை இடையே பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கம்!

0
80 special trains will be operated across the country

கொரோனா பொது முடக்கம் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வடைந்து, இயல்புநிலை தற்போது நிலவி வருகிறது. இந்நிலையில் இனி வருகிற நாட்கள் பண்டிகை நிறைந்த நாட்கள் என்பதால் போக்குவரத்து குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் – கோவை, மதுரை இடையே பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

80 special trains will be operated across the country
Chennai to Madurai Festival Special Trains

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளதாவது:

* சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-மதுரை (வண்டி எண்: 06019) இடையே திங்கட்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் ஏ.சி அதிவிரைவு சிறப்பு ரெயில் வருகிற 19-ந்தேதி முதல், இரவு 10.30 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு மதுரை சென்றடையும்.

மறுமார்க்கமாக மதுரை-சென்னை சென்டிரல் (06020) இடையே செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் ஏ.சி. அதிவிரைவு சிறப்பு ரெயில் வருகிற 20-ந்தேதி முதல் மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள காலை 7.50 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.

* சென்னை சென்டிரல்-கோவை (06027) இடையே இயக்கப்படும் சதாப்தி சிறப்பு ரெயில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் இரவு 7.10 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 19-ந்தேதி முதல் இயக்கப்படும். மறுமார்க்கமாக கோவை-சென்னை சென்டிரல்(06028) இடையே இயக்கப்படும் சதாப்தி சிறப்பு ரெயில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் மதியம் 3.05 மணிக்கு கோவையில் இருந்து வருகிற 19-ந்தேதி முதல் இயக்கப்படும்.

* கன்னியாகுமரி-ஹவுரா (02666) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் சனிக்கிழமை தோறும் காலை 8 மணிக்கு கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 24-ந்தேதி முதல் இயக்கப்படும். மறுமார்க்கமாக ஹவுரா-கன்னியாகுமரி (02665) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் திங்கட்கிழமை தோறும் மாலை 4.10 மணிக்கு ஹவுரா ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

* சந்திரகாச்சி-சென்னை சென்டிரல் (02807) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.05 மணிக்கு சந்திரகாச்சி ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 16-ந்தேதி முதல் இயக்கப்படும். மறுமார்க்கமாக சென்னை சென்டிரல்- சந்திரகாச்சி (02080) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.10 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 18-ந்தேதி முதல் இயக்கப்படும்.

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...