5 விக்கெட்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி | CSK vs MI

0

13-வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றிப்பெற்றுள்ளது. டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது, இதையடுத்து மும்பை அணி களமிறங்கியது. 20 ஓவர் முடிவில் மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை குவித்திருந்தது. 163 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய் மற்றும் ஷேன் வாட்ஸன் சொற்ப ரன்களில் அவுட் ஆக, அடுத்து களமிறங்கிய அம்பாதி ராயுடு மற்றும் டூ பிளிசிஸ் கூட்டணி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. அம்பாதி ராயுடு 48 பந்துகளுக்கு 71 ரன்களுடன் அவுட் ஆனார், தொடர்ந்து நிதானமாக விளையாடிய டூ பிளிசிஸ் 44 பந்துகளில் 58 ரன்கள் குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இறுதியாக சென்னை அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது.

Chennai Super Kings Won by 5 Wickets

CSK vs MI: Chennai Super Kings Score Board

Chennai Super Kings Won by 5 Wickets
Chennai Super Kings Won by 5 Wickets
Chennai Super Kings Won by 5 Wickets
Chennai Super Kings Won by 5 Wickets

தற்போதைய செய்திகள்:-

⮕ மாற்றுத்திறனாளியாக நடிக்கவுள்ளார் நடிகை சமந்தா!

⮕ இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானங்கள் பறக்க 15 நாட்கள் தடை

‘என் பெயர் பயன்படுத்தி வருபவர்களை நம்ப வேண்டாம்’ அஜித் குமார்!

⮕ அனுஷ்காவின் ‘நிசப்தம்’ திரைப்படம் OTT-ல் வெளியீடு?

ஆர்டர் செய்தது ஆப்பிள் வாட்ச், ஆனால் வந்தது? இசையமைப்பாளருக்கு நிகழ்ந்த ஏமாற்றம்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…