20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!

0
Chennai Super Kings Won by 20 Runs

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின், 29 -வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் அணியும் விளையாடியது. டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்து, முதலில் பேட்டிங்கை துவங்கியது. 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்திருந்தது. 168 இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணியின் துவக்கம் சுமாராக அமைய, ஆரம்பம் முதலே தடுமாறியது. மூன்றாவதாக களமிறங்கிய கேன் வில்லியம்சன் மட்டுமே அதிரடியாக ஆடி 57 ரன்களை குவித்தார். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்ததால், 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணியில் அதிகபட்சமாக கரன் ஷர்மா & டுவைன் பிராவோ தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

Chennai Super Kings Won by 20 Runs
Chennai Super Kings Won by 20 Runs

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...