13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின், இன்று நடைபெறும் இரண்டு போட்டிகளில் 18 -வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடியது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்து, 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்களான வாட்சன் & டூ பிளிசிஸ் இருவருமே களத்தில் நின்று ஆட்டத்தை முடித்துள்ளனர். 17.4 ஓவர்களில் விக்கெட் இழப்பு ஏதுமின்றி 181 ரன்கள் எடுத்து மாபெரும் வெற்றிப்பெற்றுள்ளது. வாட்சன் 83 ரன்களுடனும், டூ பிளிசிஸ் 87 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.


செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...