13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின், இன்று நடைபெறும் இரண்டு போட்டிகளில் 21 -வது போட்டியில் MS தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்து, முதலில் பேட்டிங்கை துவங்கியது. துவக்க வீரரான ராகுல் திரிபாதி(81) தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், அவர் மட்டும்தான் வெளிப்படுத்தினார். இறுதியாக 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் எடுத்து, 168 ரன்களை சென்னை அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. சென்னை அணியை பொறுத்தவரை டுவையின் பிராவோ 3 விக்கெட்டுகளும், ஷர்டல் தாகூர், கரன் சர்மா & ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தியிருந்தனர்.


செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...