நிவர் புயலின் எதிரொலியாக சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால், அடையாற்றில் தண்ணீர் திறக்கும் சூழல் ஏற்பட்டால் கரையோர மக்களுக்கு முறையான எச்சரிக்கை வழங்க வேண்டுமென மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வங்க கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல், தற்போது புதுச்சேரிக்கு 370 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு 420 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற்று நாளை பிற்பகல் மாமல்லபுரம், காரைக்கால் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...