‘சந்திரமுகி 2’ திரைப்பட விமர்சனம் | Chandramukhi 2 Movie Review & Rating
படக்குழு:
நடிகர்கள்: ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா, லக்ஷ்மி மேனன், மகிமா நம்பியார் மற்றும் பலர்.
இசை: M.M.கீரவாணி
ஒளிப்பதிவு: R.D.ராஜசேகர்
எடிட்டிங்: ஆண்டனி
தயாரிப்பு: லைகா ப்ரொடக்ஷன்ஸ்
இயக்கம்: P.வாசு.


கதைச்சுருக்கம்:
(“கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா, அங்க ஒரு கொடும ஜிங்கு ஜிங்குனு ஆடுனுச்சாம்” என்கிற பழமொழிபோல) ரங்கநாயகியாக வரும் ராதிகா, தனது குடும்பத்தில் நடக்கும் தொடர் பிரச்சனைகள் காரணமாக குலதெய்வம் கோவிலுக்கு சென்று யாகம் நடத்த திட்டமிடுகிறார். இதற்காக அந்த குலதெய்வ கோவில் இருக்கும் ஊருக்கு சென்று, அங்குள்ள அரண்மனையில் தனது மொத்த குடும்பத்துடன் தங்குகிறார். ஆனால் அந்த அரண்மனையில் காத்திருந்த பேரதிர்ச்சி இவர்களது குடும்பத்தை எப்படி பாதித்தது? சந்திரமுகி யார்? வேட்டையன் யார்? இறுதியாக பேய் எப்படி விரட்டப்பட்டது? என்கிற சுவாரஸ்யமே கதைச்சுருக்கம்.
FC விமர்சனம்:
P.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில் நேற்று(செப்.28) வெளியான ‘சந்திரமுகி 2’ திரைப்படம் எப்படி இருக்கு? வாருங்கள் விமர்சனத்திற்குள் சென்று பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை, ஹீரோ லாரன்ஸ் வழக்கமான காமெடி, மாஸ், ஸ்டைல், (ஓவர் ஆக்டிங்) என நடிப்புடன் படமுழுக்க வந்து செல்கிறார். கங்கனா ரனாவத், உண்மையில் அவரால் முடிந்தளவு ‘சந்திரமுகி’ கதாப்பாத்திரத்தை தாங்கிப் பிடித்துள்ளார். வடிவேலுவின் காமெடி நீண்ட நாட்களுக்கு பிறகு சில இடங்களில் சிரிக்க வைக்கிறது. முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள லக்ஷ்மி மேனன் இதுவரை இல்லாத நடிப்பை கொடுத்துள்ளார், பார்க்க நன்றாக இருந்தது. இவர்களை தவிர வரும் ராதிகா, மகிமா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா, ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் ஏற்றுக் கொண்ட பாத்திரத்தை குறையில்லாமல் செய்துள்ளனர்.


M.M.கீரவாணி இசையில் பாடல்கள் ஓகே ரகம்தான், ஆனால் பின்னணி இசையில் கொஞ்சம் அதிகமாக ஸ்கோர் செய்கிறார். R.D.ராஜசேகரின் ஒளிப்பதிவில் கலர்ஃபுல் காட்சிகளாக படம் நெடுகிலும் ரசிக்கவைக்கிறது. சந்திரமுகி முதல் பாகத்தில் சிறந்த திரைக்கத, திகில், ரஜினி, ஜோதிகாவின் நடிப்பு, வடிவேலுவின் காமெடி, வித்யாசாகரின் சிறந்த இசை என அனைத்துமே நம்மை ரசிக்க வைத்தது. அதனால் தான் மாபெரும் வெற்றியைப் பெற்று ‘சந்திரமுகி’ என்கிற பிராண்ட் உருவானது. ஆனால் அதன் இரண்டாம் பாகமாக வரும் இப்படத்தில் மேற்கண்ட அனைத்தும் நம்மை ரசிக்க வைக்கிறதா என்றால் முழுமையாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இத்தனைக்கும் முதல் பாகத்தின் கதையை தான் கொஞ்சம் பட்டி பாத்து (அப்படியே திருப்பி) எடுத்துள்ளனர். இதன் காரணமாக அடுத்து இதுதான் நடக்க போகிறது என எளிதாக கணிக்க முடிகிறது. அதனால் திரைக்கதையில் பெரிய சுவாரஸ்யமில்லை. சரி, பேய் படமாச்சே ஹாரர் காட்சிகள் இருக்கான்னு பார்த்தா? அதுவுமே எங்கும் பயப்பட வைக்கும் அளவு இல்லை. சந்திரமுகி குரலிலுமே பெரிய பயம் தெரியவில்லை. VFX கிராபிக்ஸ் கொஞ்சம் கூட ஒட்டவில்லை, அதிலாவது கொஞ்சம் மெனக்கெட்டு ரசிக்க வைத்திருக்கலாம். (உதாரணமாக கிளைமாக்ஸ் காட்சியில் வரும் நாய்கள் சண்டை கார்ட்டூன் படங்கள் தேவலாம் போல). பொதுவாக பேய் படங்களில் லாஜிக் குறைகள் கண்டுக்கொள்ள கூடாது தான், ஆனால் ஹீரோ அறிமுகத்தை மாஸாக காட்ட வேண்டுமென லாரன்ஸ் செய்யும் சண்டைக்காட்சி அபத்தத்தின் உச்சம். மொத்தமாக படம் எப்படி என்றால், நாம் இவ்வளவு குறைகள் கண்டுப்பிடித்தாலும் குடும்பங்கள், குழந்தைகளை இந்த படம் கவருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. சந்திரமுகி முதல் பாகம் பார்க்காதவர்கள் வேண்டுமால் முயற்சி செய்து பார்க்கலாம்.
ஆவரேஜ் ரகம் தாங்க…
Adult Warning – ரத்தம் தெறிக்கக் கூடிய தலையை வெட்டும் காட்சிகள் இருக்கிறது. ஆனால் பெரிதாக பயமில்லை.
Chandramukhi 2 Movie Film Crazy Rating – 2.5 /5
தவறவிடாதீர்!
➤ ‘இறைவன்’ திரைப்பட விமர்சனம் இதோ
➤‘சித்தா’ திரைப்பட விமர்சனம் இதோ
➤ “தமிழ் நடிகர் தொல்லை கொடுத்தாரா?” நித்யா மேனன் விளக்கம்
➤ ‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ
➤ ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்
சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.