‘சந்திரமுகி 2’ முதல் சிங்கிள் எப்போது? வெளியான அப்டேட்:
ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி 2’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் வடிவேலு, ராதிகா சரத்குமார், லக்ஷ்மி மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாகுபலி, RRR படங்களுக்கு இசையமைத்த மரகதமணி(கீரவாணி) இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் சிங்கிள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண