கொரோனா ஆபத்தால் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள் ஒருவழியாக வரும் அக்டோபர் 15 -ஆம் தேதி திறக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், தியேட்டர்களை திறப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.


பிக்பாஸ் சீசன் 4-ன் இரண்டாம் நாள் ஹைலைட்ஸ்
- திரையரங்கு முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி தொடங்கும் முன்பாக முழுமையாக கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
- பார்வையாளர்கள் திரையரங்குள்ளே செல்லும் போது சானிடைசர் வழங்கப்பட வேண்டும்.
- அதேபோல், பார்வையாளர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும்.
- பார்வையாளர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும்.
- 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி.
- ஒரு இருக்கை இடைவெளி விட்டு அமர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்களை மட்டுமே விற்க வேண்டும்.
- ஆன்லைன் டிக்கெட் விற்பனையை ஊக்குவிக்க வேண்டும்.
* க/பெ ரணசிங்கம் திரைப்பட விமர்சனம்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...