நீண்ட போராட்டங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகர் அருண் விஜய், இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் மாஃபியா.


இப்படத்திற்கு பிறகு அக்னி சிறகுகள், சினம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார், இந்த படங்களுக்கு எல்லாம் முன்னால் துவங்கப்பட்ட படம் பாக்ஸர். விவேக் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களே மிரட்டலாக இருந்தது. இந்த படத்திற்காக அருண் விஜய் வெளிநாடுகளுக்கு சென்று மிகவும் சிரமப்பட்டு தன்னை தயார்ப்படுத்தினார். ஆனால் என்ன காரணத்தினாலோ படப்பிடிப்பு துவங்காமலே இருந்தது. இதனால் அருண் விஜயும் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த துவங்கினார். இந்நிலையில் தற்போது இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது, குத்துச் சண்டை வீரராக நடிக்கும் அருண் விஜய்க்கு வில்லனாக, பாக்ஸர் படத்தை தயாரிப்பாளரே களமிறங்கியுள்ளார். ‘எக்ஸ்சட்ரா எண்டர்டெயின்மெண்ட்’ மதியழகன் இப்படத்தை தயாரித்தும், வில்லன் கதாப்பாத்திரத்திலும் நடிக்கவுள்ளார். ரித்திகா சிங் கதாநாயகியாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதனிடையே பாக்ஸர் படம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பரபரப்பு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அருண் விஜய். அதில், பாக்ஸர் படம் தொடர்பாக என்னிடம் தொடர்ந்து கேட்கிறீர்கள். உங்களை போலவே நானும் அந்த படத்தை நினைத்து மிகவும் உற்சாகமடைகிறேன். பாக்ஸர் படத்திற்காக மிகுவும் கஷ்டப்பட்டு தயார் ஆனேன். ஆனால் முழுமையான படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. உடலளவிலும் மனதளவிலும் இந்த படத்திற்கு அதிக உழைப்பும், முயற்சியும் தேவை என்பதால் அது குறிப்பிட்ட காலகட்டத்தில நடக்க வேண்டும். அதனை தயாரிப்பு தரப்பு உறுதிப்படுத்த வேண்டும். எனவே இப்படம் குறித்த எனது அதிகாரபூர்வ அறிவிப்புக்காகக் காத்திருக்கவும். நன்றி, என அருண் விஜய் கூறியிருந்தார். இதனால் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Twitter Feed:
#Boxer!! pic.twitter.com/Zugl3pnwM7
— ArunVijay (@arunvijayno1) June 24, 2020
———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்
👉 கருப்பு புடவையில் ரசிகர்களை கவர்ந்த அனசுயா பரத்வாஜ்!
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...