புளூசட்டை மாறன் இயக்கியுள்ள ‘ஆன்டி இண்டியன்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

0
BlueSattai Maran's Anti Indian Movie Release Date Postponed
BlueSattai Maran's Anti Indian Movie Release Date Postponed

திரைப்பட விமர்சனங்களால் பிரபலமான புளூசட்டை மாறன் இயக்கிய ‘ஆன்டி இண்டியன்’ என்ற திரைப்படம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், ” டிசம்பர் 3ஆம் தேதி நமது படமான ‘ஆன்டி இண்டியன்’ ரிலீஸ் என்று தெரிவித்து இருந்தோம். தற்போது அதில் ஒரு மாற்றம். டிசம்பர் முதல் வாரத்தில் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளது. 3ஆம் தேதியன்று பிரபல நடிகர்களின் படங்களும் வெளியாகிறது.

BlueSattai Maran's Anti Indian Movie Release Date Postponed
BlueSattai Maran’s Anti Indian Movie Release Date Postponed

ஆகவே குறிப்பிட்ட நாளில் போதுமான திரையரங்குகள் கிடைப்பது கடினம் என்பதால் ஒரு வாரம் தள்ளி பத்தாம் தேதி வருவதென முடிவு செய்துள்ளோம். நீண்ட நாட்கள் காத்திருந்து விட்டோம். மேலும் ஒரு வாரம் தாமதமானால் தவறு இல்லை என்பதாலும் இத்திரைப்படம் தமிழகத்தில் உள்ள போதுமான அரங்குகளில் வெளியானால் பலரையும் சென்றடையும் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புளூசட்டை மாறன் தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்