‘பிளட் மணி’ திரைப்பட விமர்சனம் | Blood Money Movie Review

0
Blood Money Movie Review and Rating

‘பிளட் மணி’ திரைப்பட விமர்சனம்

படக்குழு:

நடிகர்கள்: பிரியா பவானி ஷங்கர், ‘மெட்ரோ’ ஷிரிஷ், கிஷோர், சுப்பு பஞ்சு மற்றும் பலர்.

இசை: சதிஷ் ரகுநந்தன்

ஒளிப்பதிவு: G பாலமுருகன் DFT

எடிட்டிங்: பிரசன்னா GK

தயாரிப்பு: எம்பரர் எண்டர்டெயின்மெண்ட்

திரைக்கதை, வசனம்: சங்கர் தாஸ்

இயக்கம்: சர்ஜுன் KM

OTT: ஜீ5 (Zee5).

Blood Money Movie Review and Rating
Blood Money Movie Review and Rating

கதைச்சுருக்கம்:

நாயகி பிரியா பவானி சங்கர் ஒரு முன்னணி மீடியாவில் வேலை செய்கிறார். மறுபக்கம், தமிழ்நாட்டில் இருந்து பிழைப்பதற்காக குவைத் நாட்டிற்கு செல்லும் கிஷோர் மற்றும் அவரது தம்பி, ஒரு குற்றத்திற்காக அங்குள்ள சிறையில் 5 வருடம் அடைக்கப்படுகிறார்கள். மேலும், 5 வருடம் கழித்து மரணதண்டனையும் நிறைவேற்றப்பட இருக்கிறது. இன்னும் 30 மணி நேரத்தில் அவர்கள் இருவருக்கும் தூக்கு என்கிற நிலையில், இதுக்குறித்த செய்தி இங்குள்ள பத்திரிக்கையாளரான பிரியா பவானி ஷங்கருக்கு தெரிய வருகிறது. இறுதியாக, குறிப்பிட்ட 30 மணி நேரத்தில் தூக்கு தண்டனையிலிருந்து பிரியா காப்பாற்றினாரா? இல்லையா? அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? என்பதே மீதிக்கதை.

Blood Money Movie Review and Rating
Blood Money Movie Review and Rating

FC விமர்சனம்:

நடிகை பிரியா  ஷங்கர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து, சர்ஜுன் இயக்கத்தில் இன்று(டிசம்பர் 24) ஜீ5 OTT தளத்தில் வெளியாகியுள்ள ‘பிளட் மணி’ படத்தின் விமர்சனத்தை பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை பிரியா பவானி ஷங்கருக்கு திரை வாழ்கையில் சொல்லிக்கொள்ளும் படியான ஒரு நீட்டான கதாப்பாத்திரம் என்று சொல்லலாம். அதை நிறைவாகவே செய்து கொடுத்துள்ளார். கிஷோர் நடிப்பை பற்றி சொல்லவா வேண்டும்! அதுவும் குறிப்பிட்ட தன் மகளிடம் பேசும் காட்சியில் உருக வைத்துள்ளார். அதேபோல் கிஷோர் மகளாக வரும் அந்த குழந்தை நட்ச்சத்திரம் மிக அழகாக, அசரவைக்கும் அளவு நடித்துள்ளது. இவர்களை தவிர ‘மெட்ரோ’ ஷிரிஷ் கொடுத்த பாத்திரத்தை நீட்டாக செய்துள்ளார். நடிப்பை பொறுத்தவரை எந்தவொரு குறையுமில்லை. அப்போ! எதுதான் குறை என்றால்? சற்று பொறுமை காக்க…

Blood Money Movie Review and Rating
Blood Money Movie Review and Rating

பாலமுருகனின் ஒளிப்பதிவு டாப் கிளாஸ். அதேபோல் பிரசன்னாவின் எடிட்டிங்கும் சில இடங்களில் ரசிக்கவும், சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்துகிறது. மேலும், சதிஷ் ரகுனந்தினின் இசை அருமை, மூன்று தனிபட்ட இடங்களுக்கும் அதற்கேற்ற நேட்டிவ் பின்னணி இசையை கொடுத்து ஸ்கோர் செய்துள்ளார். இப்படத்தின் கதை சற்று புதிதாகவும், சுவாரஸ்யமூட்டும் வகையில் இருந்தாலுமே, இவர்கள் கையாண்ட செயற்கைத் தனமான காட்சிகளும், லாஜிக் மீறல்களாலும், திரைக்கதையின் நம்பகத்தன்மை குறைகிறது. இதுவே படத்திற்கு பெரிய குறையாக அமைந்துள்ளது. மற்றொரு நாட்டில் தண்டனைக்கு ஆளான ஒருவரை இங்குள்ள பத்திரிக்கையாளர் வெறும் 30 மணி நேரத்தில் காப்பாற்றுவது எண்பது அதீத கற்பனை. சரி, ஒருவேளை காப்பாற்ற வாய்ப்பு இருக்கு என்றாலும், 30 மணி நேரம் என்கிற லிமிட் டூ மச். இதேபோல் பல லாஜிக் மீறல்கள் படமுழுவதும் வந்து செல்கிறது. இறுதியாக படம் எப்படி என்றால்? லாஜிக் மீறல் இதெல்லாம் தூக்கி போடு, படம் சுவாரஸ்யமா இருக்குமா? என கேட்கும் ரசிகர்களுக்கு ஒருமுறை கண்டுகளிக்கும் படமாக அமைந்துள்ளது இந்த ‘பிளட் மணி’.

  Blood Money Movie FC Rating: 3 /5  

மேலும் உங்களுக்காக: 

‘ராக்கி’ திரைப்பட விமர்சனம்

’83’ திரைப்பட விமர்சனம்

கலாட்டா கல்யாணம் (அட்ராங்கி ரே) திரைப்பட விமர்சனம்

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here