சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு ‘அவள் அப்படித்தான்’ பெயரில்…

0
Biopic of Silk Smitha

தமிழ் சினிமா வரலாற்றில் மறக்கமுடியாத முகங்களில் ஒன்று சில்க் ஸ்மிதா. காந்த கண்களால் காண்பவரை வசீகரிக்கும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு தமிழில் படமாகிறது.

Biopic of Silk Smitha
Biopic of Silk Smitha

விஜயலட்சுமி என்கிற பெண்ணாக ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து சிறுவயதில் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்ட இவர், சில்க் ஸ்மிதா எனும் நடிகையாக மாறுவதற்கு முன் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள் ஏராளம். இந்நிலையில் அவருடைய வாழ்க்கையை “அவள் அப்படித்தான்” என்ற பெயரிலே காயத்ரி பிலிம்ஸ் சித்ரா லட்சுமணனும் முரளி சினி ஆர்ட்ஸ் எச். முரளியும் இணைந்து தயாரிக்கின்றனர். கண்ணா லட்டு தின்ன ஆசையா பட இயக்குனர் மணிகண்டன் இப்படத்தை இயக்குகிறார். இதுக்குறித்து கூறுகையில் “சில்க் ஸ்மிதாவின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் அவருடைய காந்தக் கண்கள். அப்படிப்பட்ட அழகான கண்கள் உடைய ஒரு அழகான பெண்ணை இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதற்காக தேடிக் கொண்டிருக்கிறோம்” என கூறியுள்ளார்.

* அனுஷ்கா நடிப்பில் ‘நிசப்தம்’ திரைவிமர்சனம்

* க/பெ ரணசிங்கம் திரைப்பட விமர்சனம்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...