பிக்பாஸ் சீசன் 4-ன் இரண்டாம் நாள் ஹைலைட்ஸ் | Bigg Boss Season 4 Tamil | Day 2

0
Bigg Boss Season 4 Tamil Day 2 Highlights

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ‘சும்மா கிழி’ பாடலுடன் துவங்கும் 2 -ஆம் நாளில், பாடலுக்கு நடுவே பிக்பாஸ் பேசுகிறார். இந்த வாரத்திற்கான நாமினேஷன் பிராசஸ் கிடையாது என கூற போட்டியாளர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். மீண்டும் அதே பாடல் ஒலிக்கிறது. இதுமுடிந்து கிட்சனில் அனிதா சம்பத்திற்கும், சுரேஷ் சக்ரவர்த்திக்கும்   பிரச்சனை ஆரம்பமாகிறது. பேசும் போது எச்சில் தெறிக்கிறது என்று சுரேஷ் கூறிய வார்த்தை எனக்கு பிடிக்கவில்லை என அனிதா துவங்க, போகப்போக சத்தம் அதிகமாக யாரும் கண்டுக்கவில்லை. ரியோ, நிஷா சாப்பிடுவதில் முனைப்பு காட்டி வர(அப்பறம் பசிக்கும்ல), பஞ்சாயத்து பண்ணலாமென்று சனம் ஷெட்டி உள்ளே வர அவரை கொஞ்சம்கூட இருவரும் மதிக்கவில்லை. பிறகு சிறிது நேரம் கழித்துரேகா வந்து இருவரையும் சமாந்தானப்படுத்தி அழைத்து செல்கிறார்.

Bigg Boss Season 4 Tamil Day 2 Highlights
Bigg Boss Season 4 Tamil Day 2 Highlights

இப்படி காலையிலேயே அதகளம் தான், அதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் இருவரும் சமாதனம் ஆகிகொள்கிறார்கள். அடுத்து பிக்பாஸ் கொடுத்த டாஸ்க், ஒவ்வொருவரும் தனது வாழ்நாளில் கடந்து வந்த பாதையை பகிர்ந்து கொள்ளும் டாஸ்க்தான் இது(அதேதான்). இதில் எட்டு நபர்களை தேர்ந்தெடுத்து, அவர்கள் அடுத்த வாரம் நாமிஷன் ப்ராசஸில் இடம் இல்லை என்பதுதான், தேர்ந்தெடுக்கப்படாத எட்டு நபர்களை மட்டுமே அடுத்தவார எலிமினேஷன் நாமினேஷனில் கூற வேண்டும். புரியவில்லையா அப்படித்தான், ஒவ்வொருவரும் கதை சொல்ல ஆரமிக்கின்றனர். முதலில் வேல் முருகன் துவங்க அவரைத் தொடர்ந்து ஒவ்வொருவாக பேசுகின்றனர். இதில் நிஷா பேசுகையில் அனைவரும் அதிகமாக எமோஷனல் ஆகின்றனர். நேற்றைய நாளில் வேல் முருகன், சனம் ஷெட்டி, நிஷா ஆகிய மூவரும் மட்டுமே பேசினார்கள். அதற்குள் பிக் பாஸ் இன்றைக்கு கோட்டா அவ்வளவுதான் என கூறி அனைவரையும் வெளியே போக சொல்கிறார். வெளியே வந்து நிஷா மீண்டும் அழ, சக போட்டியாளர்கள் ஆறுதல் கூற இப்படி எமோஷனலுடன் முடிகிறது நேற்றைய பகுதி.

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…