பிக்பாஸ் சீசன் 4-ன் முதல் நாள் ஹைலைட்ஸ் | Bigg Boss Season 4 Tamil | Day 1

0
Bigg Boss Season 4 Tamil Day 1 Highlights

வாத்தி கம்மிங் பாடலுடன் அட்டகாச நடனத்துடன் துவங்கிய பிக்பாஸ் சீசன் 4-ன் இரண்டாம் நாளில், வழக்கம்போல் போட்டியாளர்கள் அனைவரும் நடனம் ஆடினர். குறிப்பாக ஷிவானி, இன்ஸ்டாகிராமிலேயே இவரது டான்ஸ் எப்படி என்று(“”) அனைவரும் அறிந்ததே. இதையடுத்து போட்டியாளர்கள் அனைவருக்கும் முதல் டாஸ்க் கொடுக்கப்படுகிறது, அதில் ரம்யா பாண்டியனை தவிர அனைவருக்கும் எதோ பந்து கிடைக்க, வெறும்கையோடு நிற்கும் ரம்யா பாண்டியனை இந்த வார, அதாவது இந்த சீசனின் முதல் கேப்டனாக அறிவிக்கிறார் பிக் பாஸ். இது என்ன வகையான போட்டி என்று தெரியவில்லை.

Bigg Boss Season 4 Tamil Day 1 Highlights
Pic Credits: Vijay TV

இது ஒருபுறம் இருக்க, பிக்பாஸ் என்றாலே குழாயடி சண்டை தான், மற்ற சீசன்களில் குறைந்தது ஒருவாரம் சென்று தான் ஆரம்பிக்கும், ஆனால், இதில் இரண்டாம் நாளே ஆரம்பமாகி விட்டது. நாளை முதல் இந்த வார எலிமினேஷன்(Elimination) ஆரம்பமாக வுள்ளதால், அதற்கு முன்னோட்டமாக இன்று மற்றொரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. போட்டியாளர்கள் Heart & Heart Break அதாவது போட்டியாளர்களுக்குள் சண்டையை கிளப்பும் விதமாக யாரை பிடிக்கும், யாரை பிடிக்காது என்பது போல் ஒரு டாஸ்க். அதில் சிக்கியது ஷிவானி, கிட்டத்தட்ட முக்கால்வாசி போட்டியாளர்கள் கொடுக்க டார்கெட் ஆரம்பமாகிறது. ஆனால், எதற்கும் சளைக்காத ஷிவானி உஷாராகவே நடந்து கொள்கிறார். (முந்தைய சீசன்களை பார்த்திருப்பார் அல்லவா). இப்படி லேசாக புகைச்சலுடன் முடிவடைகிறது இரண்டாம் நாள்…

 

* க/பெ ரணசிங்கம் திரைப்பட விமர்சனம்

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...