வெற்றிமாறன் படத்தில் இணைந்த நடிகை பவானி ஸ்ரீ!

0
Bhavani Sri has joined the Vetrimaaran's upcoming film

அசுரன் படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் சூரி கதாநாயகனாக வைத்து படமொன்றை இயக்கி வருகிறார். எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். மேலும், முக்கிய பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகையும், ஜி.வி பிரகாஷின் தங்கையுமான பவானி ஸ்ரீ இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் சமீபத்தில் வெளியான க/பெ ரணசிங்கம் மற்றும் தங்கம் வெப் தொடரிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சத்யமங்கலம் வனப் பகுதியில் நடைபெற்று வருகிறது.

Bhavani Sri has joined the Vetrimaaran's upcoming film
Bhavani Sri has joined the Vetrimaaran’s upcoming film

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...