விஜய் சேதுபதியை நினைத்து கோபப்படுவதா? அறியாமையை நினைத்து சிரிப்பதா? பாரதிராஜா

0
Bharathiraja Letter to Vijay Sethupathi

இலங்கை கிரிக்கெட் அணி நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகவுள்ள திரைப்படம் 800. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இப்படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இதுக்குறித்த அறிவிப்பு வெளியான நாள்முதல், இப்படத்தில் நடிக்க வேண்டாம் என விஜய் சேதுபதிக்கு இலங்கை தமிழர்கள் உள்பட பலரும் பல வகையில் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டிற்கு பிறகு திரைத்துறையிலும் கண்டன குரல்கள் அதிகரித்துள்ளன.

Muthiah Muralidaran Biopic Motion Poster
Muthiah Muralidaran Biopic Motion Poster

அந்த வகையில் இயக்குனர் சிகரம் பாரதிராஜா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தாங்கள் செய்யவிருக்கும் 800 என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பற்றிய பயோபிக் படமாக அது உருவாகப் போவதாக அறிந்தேன். நம் ஈழத் தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்த போது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா, சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர் . விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன்.

எத்தனையோ துரோகங்களை எம்மினம் கடந்து வந்துள்ளது. எங்களைப் பொருத்தவரை முத்தையா முரளிதரன் ஒரு நம்பிக்கைத் துரோகிதான். அடிபட்ட வலியை நினைவுகூறும் மக்கள் என்னிடம், ஏன் நம்ம விஜய் சேதுபதி அதில் நடிக்கிறார்? மறுத்திருக்கலாமே… என கேட்கின்றனர். அவர்களின் வேதனையும் வலியும் புரியும் அதேசமயம் அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பையும் என்னால் காண முடிந்தது. உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் சார்பாக நான் கோரிக்கை வைக்கிறேன். இனத் துரோகம் செய்த ஒருவரின் முகம் காலகாலமாக உங்கள் முகம் வெறுப்போடே எம் மக்கள் பார்க்க வேண்டுமா.
Bharathiraja Letter to Vijay Sethupathi
எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள். தவிர்த்தால் எப்போதும் எம் ஈழ மக்களின் மனதிலும், என் மனதிலும் நன்றியோடு நினைவு கொள்ளப்படுவீர்கள்” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Bharathiraja Letter to Vijay Sethupathi
Bharathiraja Letter to Vijay Sethupathi
Bharathiraja Letter to Vijay Sethupathi
Bharathiraja Letter to Vijay Sethupathi
Bharathiraja Letter to Vijay Sethupathi
Bharathiraja Letter to Vijay Sethupathi

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...