‘முந்தானை முடிச்சு’ படத்தை ரீமேக் செய்யும் பாக்யராஜ்! ஹீரோ யார் தெரியுமா!

0
Bhagyaraj's Mundhanai Mudichu is all set to be remade

1983 -ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி, நடித்து வெளியான மெகாஹிட் திரைப்படம் முந்தானை முடிச்சு.

Bhagyaraj's Mundhanai Mudichu is all set to be remade

ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தில் ஊர்வசி, K K சவுந்தர், தீபா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்திருந்த இப்படம் வசூலில் வாரிக்குவித்தது மட்டுமில்லாமல், பாக்யராஜ் படங்களிலேயே அதிக நாட்கள் ஓடிய படம் என்கிற பெருமையையும் பெற்றது. முருங்கைக்காய்க்கு பெயர்போன இப்படம் தற்போது மீண்டும் இப்படத்தை ரீமேக் செய்ய முன்வந்துள்ளார் பாக்யராஜ், இதில் ஹீரோவாக சசிகுமார் நடிக்கவுள்ளார். அதை நிரூபிக்கும் விதமாக பாக்யராஜ், சசிக்குமார் சந்திப்பு அமைந்துள்ளது. பாக்யராஜ் இயக்கவுள்ள இப்படத்தின் ரீமேக் உரிமையை ஏ.வி.எம் சரவணனிடமிருந்து ஜே.எஸ்.பி சதீஷ் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளார். மேலும்,  இசையமைப்பாளர் உள்ளிட்ட இதர படக்குழுவினர் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bhagyaraj's Mundhanai Mudichu is all set to be remade

 

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...