‘பீஸ்ட்’ திரைப்பட விமர்சனம் | Beast Movie Review and Rating

0
Beast Movie Review and Rating
Beast Movie Review and Rating

‘பீஸ்ட்’ திரைப்பட விமர்சனம் | Beast Movie Review and Rating

படக்குழு:

நடிகர்கள்: விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ், VTV கணேஷ், யோகி பாபு மற்றும் பலர்.

இசை: அனிருத்

ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்சா

எடிட்டிங்: நிர்மல்

தயாரிப்பு: சன் பிக்சர்ஸ்

இயக்கம்: நெல்சன்.

Beast Movie Review and Rating
Beast Movie Review and Rating

கதைச்சுருக்கம்:

படத்தின் துவக்கமே தீவிரவாதி ஒருவரை பிடிக்கிறார் நாயகன் விஜய். பிடிப்பட்ட அந்த தீவிரவாதியை விடுவிக்கக்கோரி சென்னையில் உள்ள மால் ஒன்றை ஹைஜாக் செய்யும் தீவிரவாதிகள், உள்ளே எதேச்சையாக இருக்கும் நாயகன், அப்பறம் என்ன? கண்டிப்பாக காப்பாற்றிருப்பார்? அது எப்படி? என்பதே கதைச்சுருக்கம்.

Beast Movie Review and Rating
Beast Movie Review and Rating

FC விமர்சனம்:

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பீஸ்ட், விஜய் ரசிகர்களின் ஏகோபித்த எதிர்ப்பார்ப்பில் இருந்த இப்படம் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை இப்படத்தில் விஜய் படத்தை முழுவதும் தாங்கியுள்ளார், ஸ்டைலிஷ், நடனம், ஆக்ஷன் என அனைத்திலும் ரசிகர்களை கவரும் வகையில் திருப்திப்படுத்தியுள்ளார். அவரைத்தவிர சொல்ல வேண்டுமானால் செல்வராகவன் பாத்திரத்தை சொல்லலாம். சொல்கிற மாதிரி கதாப்பாத்திரம் அதை நிறைவாகவே செய்துள்ளார். இவர்களை தவிர மற்ற அனைத்து நடிகர்களையுமே வீணடித்துள்ளார் இயக்குனர். மலையாளத்தில் சிறந்த நடிகராக வலம்வரும் சைன் டாம் சாக்கோவை பெயருக்கு எடுத்து வைத்திருகிறார்கள்.

Beast Movie Review and Rating
Beast Movie Review and Rating

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு, அனிருத்தின் தெறிக்கும் இசை, கிரணின் பிரம்மாண்டமான ஆர்ட், அன்பறிவு சகோதரர்களின் மிரட்டலான ஆக்ஷன், சவுண்ட் டிசைன் என இவை அனைத்துமே படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. படத்தை ஓரளவு காப்பாற்றியதும் இவைகள் தான். இளம் இயக்குனர்கள் பெரிய நடிகர் கிடைத்துவிட்டால் போதும் பிரமாண்டமான படம் ஒன்றை இயக்கிவிடலாம் என மட்டுமே நினைக்கின்றனர் போலும், சமீப கால படங்களே அதற்கு உதாரணம். கதை, திரைக்கதையில் பலம் இல்லையென்றால் படம் நிக்காது என்பதை எப்போது தான் உணரப்போகிறார்களோ தெரியவில்லை.

இப்படத்திலும் வெறும் டெக்னிக்கல் விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ள இயக்குனர் நெல்சன் திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். நெல்சனின் முந்தைய படங்களின் பலமே காமெடி தான் ஆனால் அது மொத்தமாக மிஸிங். இதனாலே காட்சிகளில் சுவாரஸ்யங்கள் இல்லாமலே நகர்கிறது. அதைவிட பல லாஜிக் மீறல்கள், கண்டினியூட்டியில் குறை என அடுக்கிக்கொண்டே செல்லலாம். இறுதியாக படம் எப்படி என்றால்? விஜயின் நடனம், ஆக்ஷனுக்காக வேண்டுமானால் ஒரு முறை பார்க்கலாம். மற்றபடி ஆவரேஜ் ரகம்தான்…

  Beast Movie FC Rating: 2.5 /5  

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE 

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்