குற்றால அருவிகளில் குளிக்க தடை! முழு விவரம் இதோ

0
Bathing in Kutralam waterfalls is prohibited
Bathing in Kutralam waterfalls is prohibited

குற்றால அருவிகளில் குளிக்க தடை! முழு விவரம் இதோ:

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அப்பகுதியில் உள்ள நீர் ஓடைகள் , நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அதிலும் குற்றாலம் பகுதியில் உள்ள முக்கிய அருவி மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக் கருதி குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குறிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்தில் குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்த நிலையில் வெள்ளப் பெருக்கினால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0