பிரதமர் மோடி பிறந்தநாள் நிகழ்ச்சியில் பலூன் வெடித்து விபத்து!

0
Balloon Burst during Modi Birthday Celebration

சென்னை, பாடியில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழாவில் வைக்கப்பட்ட கேஸ் பலூன்கள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதனால் கட்சி நிர்வாகி உட்பட 13 பேர் காயமடைந்தனர். பாஜக விவசாய அணி சார்பில், பிரதமர் மோடிக்கு பிறந்த நாள்விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதில் 2,000 கேஸ் பலூன்களை பறக்கவிடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மறுபுறம், பாஜக விவசாய அணி துணைத் தலைவர் முத்துராமனை வரவேற்று பட்டாசு வெடிக்கப்பட்டது. பட்டாசு வெடித்ததில் நிகழ்ச்சியில் பறக்கவிடப்பட்டிருந்த 2,000 கேஸ் பலூன்கள் மீது தீப்பொறி பட்டு சிதறியது. இந்த விபத்தில், பா ஜ க விவசாயஅணி துணைத்தலைவர் முத்துராமன் உள்பட அருகில் நின்று கொண்டிருந்த அனைவரும் தீக்காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீடியோ:

 

தற்போதைய செய்திகள்:-

⮕ மாற்றுத்திறனாளியாக நடிக்கவுள்ளார் நடிகை சமந்தா!

⮕ இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானங்கள் பறக்க 15 நாட்கள் தடை

‘என் பெயர் பயன்படுத்தி வருபவர்களை நம்ப வேண்டாம்’ அஜித் குமார்!

⮕ அனுஷ்காவின் ‘நிசப்தம்’ திரைப்படம் OTT-ல் வெளியீடு?

ஆர்டர் செய்தது ஆப்பிள் வாட்ச், ஆனால் வந்தது? இசையமைப்பாளருக்கு நிகழ்ந்த ஏமாற்றம்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...