பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘வர்மா’ திரைப்படம் OTT-ல் வெளியீடு!

0
Bala's Varma Movie Release on OTT

இயக்குனர் பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘வர்மா’ திரைப்படம் OTT-ல் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் விஜய் தேவாரகொண்டா நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் அடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்காக, இந்த வர்மா திரைப்படம் உருவானது.

Bala's Varma Movie Release on OTT
Bala’s Varma Movie Release on OTT

முதன்முறையாக பாலா ரீமேக் படத்தை ஒப்புக்கொண்டு இயக்கிய படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் துருவ் விக்ரம், ரைசா வில்சன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட படத்தினை பாலா இயக்கி முடித்த பிறகு அது திருப்திகரமாக இல்லை என கூறி முழுமையாக நிராகரித்து விட்டு, வேறொரு இயக்குனர் மூலமாக ஆதித்ய வர்மா படத்தினை எடுத்து வெளியிட்டார்கள். ஆனால், அப்படம் பெரியளவில் சோபிக்கவில்லை என்பது வேறு, இந்நிலையில் பாலா இயக்கிய ‘வர்மா’ படத்தை சிம்ப்ளி சவுத் என்கிற  OTT தளத்தில் வரும் அக்டோபர் 6 -ஆம் தேதி வெளியிடவுள்ளனர். இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Bala's Varma Movie Release on OTT
Bala’s Varma Movie Release on OTT

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...