பேச்சுலர் திரைப்பட விமர்சனம் | Bachelor Movie Review

0
Bachelor Movie Review and Rating
Bachelor Movie Review and Rating

பேச்சுலர் திரைப்பட விமர்சனம்

படக்குழு:

நடிகர்கள்: ஜி.வி.பிரகாஷ், திவ்யா பாரதி, முனிஸ்காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர்.

இசை: சித்து குமார், திபு நினான் தாமஸ், AH ஹாசிப் & ஜி.வி.பிரகாஷ்.

ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர்

எடிட்டிங்: சான் லோகேஷ்

தயாரிப்பு: ஆக்சஸ் ஃபிலிம் பாக்டரி

இயக்கம்: சதீஷ் செல்வகுமார்.

Bachelor Movie Review and Rating
Bachelor Movie Review and Rating

கதைச்சுருக்கம்:

கதைக்களமான பெங்களூரில் நாயகன் ஜிவி பிரகாஷும், நாயகி திவ்யபாரதி இருவரும் சேர்ந்து தங்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. பிறகு என்ன, இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது. இவர்களுக்குள் ஏற்படும் அதீத காதலால் என்னென்ன நடக்கிறது? இறுதியில் இருவரும் இணைந்தார்களா? என்பதே மீதிக் கதை.

Bachelor Movie Review and Rating
Bachelor Movie Review and Rating

FC விமர்சனம்:

‘லிவிங் டூ கெதர்’ என்கிற ஒன்றை மையமாக வைத்து கதைக்களம் உருவாகியுள்ளது. முதலில் நடிகர்கள், நாயகன் ஜிவி பிரகாஷ் சினிமா கேரியரில் நடிப்புக்கு இப்படம் முக்கிய இடமாக இருக்கும், அந்தளவிற்கு ஸ்மார்ட்டாகவும், நேர்த்தியாகவும் நடித்துள்ளார். அதேபோல், நாயகி திவ்யபாரதி சற்றும் குறையில்லாமல் நடித்துள்ளார், முதல் படம் போன்று தெரியவில்லை. இவர்களை தவிர முனிஸ்காந்த் உள்ளிட்ட மற்ற நடிகர், நடிகைகளும் தங்களது பத்திரங்களை நன்றாகவே செய்துள்ளனர்.

Bachelor Movie Review and Rating
Bachelor Movie Review and Rating

டெக்னிக்கல் டீமை பொறுத்தவரை தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு மிக அருமையாகவும், அழகாகவும் கதைக்கு பொருந்தியுள்ளது. பாடல்கள் பெரிதாக ரசிக்கும் படியில்லை என்றாலும், பின்னணி இசை பலமாக அமைந்துள்ளது. எடிட்டிங் தான் கொஞ்சம் கோட்டை விட்டது போல் உணர்வு. ஏனெனில் விறுவிறுப்பாக இருக்கவேண்டிய திரைக்கதையில், சோர்வு ஏற்படும் அளவிற்கு படத்தின் நீளம் அமைந்துள்ளது. இரண்டாம் பாதியில் இருந்த காமெடி, சுவாரஸ்யம் முதல் பாதியில் குறைவுதான். இறுதியாக படம் எப்படி இருக்கு? என்றால், சமகால இளைஞர்களை ஈர்க்கும் விதத்தில் படம் இருப்பதால், அவர்கள் மட்டும்(18+) ஒருமுறை பார்க்கும் படமாக இந்த பேச்சுலர் அமைந்துள்ளது.

  Bachelor Movie FC Rating – 3 /5  

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

 

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்