‘ஐங்கரன்’ திரைப்பட விமர்சனம் | Ayngaran Movie Review & Rating

0
Ayngaran Movie Review & Rating
Ayngaran Movie Review & Rating

‘ஐங்கரன்’ திரைப்பட விமர்சனம் | Ayngaran Movie Review & Rating

படக்குழு:

நடிகர்கள்: ஜிவி பிரகாஷ், மஹிமா நம்பியார், சித்தார்த் ஷங்கர் மற்றும் பலர்.

இசை: ஜிவி பிரகாஷ்

ஒளிப்பதிவு: சரவணன் அபிமன்யூ

எடிட்டிங்: ராஜா முகமத்

தயாரிப்பு: காமன் மேன்

இயக்கம்: ரவி அரசு.

Ayngaran Movie Review & Rating
Ayngaran Movie Review & Rating

கதைச்சுருக்கம்:

புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை கொண்டு சாதிக்க துடிக்கும் நடுத்தர குடும்ப இளைஞர் ஜிவி பிரகாஷ், ஆனால் உரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருந்து வருகிறார். மறுபுறம், வடநாட்டு கொள்ளை கும்பல் ஒன்று பெரிய நகைக்கடைகளின் புகுந்து, தனது கைவரிசையைக் காட்டுகிறது. திருடிய நகைகளை எடுத்து செல்லும்போது அந்த நகைகள் ஆழ்துளை கிணற்றுக்குள் விழ, அதனை எடுக்க காவல்துறையில் உள்ள கருப்பு ஆட்டின் உதவியுடன் ஒரு குழந்தையை அந்த குழியில் விழவைக்கிறார்கள். இறுதியாக இந்த பிரச்சனைக்குள் நாயகன் எப்படி வந்தார்? அந்த குழந்தையை மீட்டார்களா? கிளைமாக்ஸ் என்ன என்பதே கதைச்சுருக்கம்.

Ayngaran Movie Review & Rating
Ayngaran Movie Review & Rating

FC விமர்சனம்:

ஈட்டி படத்தை இயக்கிய ரவி அரசு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள இப்படம் நீண்ட வருடங்களாக கிடப்பில் இருந்தது. இந்நிலையில் பல தடைகளை மீறி நாளை(மே 5) இப்படம் வெளியாகவுள்ளது. அப்பறம் நீ எப்படி பார்த்த? என்று கேட்காதீங்க!பத்திரிகையாளர்களுக்காக பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது. சரி படம் எப்படி என விமர்சனத்தில் பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை நாயகன் ஜிவி பிரகாஷ் துடிப்பான சாதிக்க துடிக்கும் இளைங்கனாக அசத்தியுள்ளார். ஜிவி பிரகாஷ் திரை வாழ்கையில் ஒரு சிறந்த படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நாயகி மகிமா நம்பியாருக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக வாய்ப்பு இல்லை, இருப்பினும் கொடுத்த வேலையை அழகாக செய்துள்ளார். வில்லனாக வரும் சித்தார்த் சங்கர் உண்மையிலேயே நன்றாக நடித்துள்ளார். ஹீரோ – வில்லன் சரியான போட்டி என சொல்லலாம். சரவணன் அபிமன்யூவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம், ஜிவி பிரகாஷ் இசை இன்னும் மெருகேற்றியிருக்கலாம். இயக்குனர் ரவி அரசு நல்ல கதைக்களத்தை தேர்வு செய்து அதற்கான முழு உழைப்பையும் கொடுத்துள்ளார் என்பது பல காட்சிகளில் தெரிகிறது. 

Ayngaran Movie Review & Rating
Ayngaran Movie Review & Rating

படத்தின் குறியாக தெரிவது இடையில் வரும் தொய்வு, படத்தின் துவக்கமே நாயகன் சம்பத்தப்பட்ட காட்சி, கொள்ளை, கோழிக்கறி பிரச்சனை என என்ன கதை? எனுமளவிற்கு சென்றாலும், அதற்கு பிறகு சரியான பாதையில் செல்ல துவங்குகிறது. மற்றபடி பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. இறுதியாக படம் எப்படி? என்று கேட்டால், நல்ல மெஸ்சேஜ் உள்ள, விறுவிறுப்பான திரைப்படம். கண்டிப்பாக இளைங்கர்கள், பெற்றோர்கள் பார்க்க வேண்டிய படமாக இந்த ஐங்கரன் வந்துள்ளது.  

Ayngaran Movie FC Rating: 3.5 /5

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்