1978 -ம் ஆண்டு ‘உலகநாயகன்’ கமல்ஹாசன், ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அவள் அப்படிதான்’.


ருத்ரய்யா இயக்கத்தில் உருவான இப்படம் அந்தக் காலகட்டத்தில் பெண்ணியம் பேசிய படங்களில் முக்கியமான படமாக அமைந்தது. இந்நிலையில் சுமார் 42 வருடங்கள் கழித்து மீண்டும் இப்படம் ரீமேக்காக உருவாகவுள்ளது. பாணா காத்தாடி இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இப்படத்தை இயக்கவுள்ளார், ரஜினி, கமல் கதாப்பாத்திரங்களில் சிம்பு, துல்கர் சல்மான், விஜய் தேவாரகொண்டா இவர்களில் இருவர் நடிக்கவுள்ளதாகவும், ஸ்ரீப்ரியா கதாப்பாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதுக்குறித்து இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் கூறியுள்ளதாவது, “ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் படித்து முடித்து முதல்முறையாக படம் இயக்கியது ருத்ரய்யா தான். நானும் ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் சினிமாவுக்கு வந்ததால் அந்தப் படம் என் இதயத்துக்கு நெருக்கமானது, தவிர வேறு காரணங்களும் இருக்கின்றன. ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது. படத்தின் உரிமை யாரிடம் இருக்கிறது என தெரியவில்லை. ருத்ரய்யா தற்போது உயிருடன் இல்லை. அவரது மகள் தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார்.


ஆனால், அவருக்கும் அது பற்றி தெரியுமா என உறுதியாக தெரியவில்லை. படத்தைக் காட்சிக்கு காட்சி அப்படியே ரீமேக் செய்ய நான் விரும்பவில்லை. ஆனால் எந்த தடையும், இடையூறும் இல்லாமல் எடுக்க விரும்புகிறேன். எனது அனைத்து படங்களுக்கும் யுவன் இசையமைத் திருப்பார். ஆனால் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்க விரும்புகிறேன்” என தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.
பொன்மகள் வந்தாள் திரைப்பட விமர்சனம்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...