கலாட்டா கல்யாணம் (அட்ராங்கி ரே) திரைப்பட விமர்சனம்

0
Atrangi Re Movie Review and Rating
Atrangi Re Movie Review and Rating

கலாட்டா கல்யாணம் (அட்ராங்கி ரே) திரைப்பட விமர்சனம்

படக்குழு:

நடிகர்கள்: தனுஷ், அக்ஷய் குமார், சாரா அலி கான் மற்றும் பலர்.

இசை: ஏ.ஆர்.ரஹ்மான்

ஒளிப்பதிவு: பங்கஜ் குமார்

எடிட்டிங்: ஹேமல் கோதரி

தயாரிப்பு: டி-சீரிஸ், கலர் யெல்லோ ப்ரொடக்ஷன்ஸ், கேப் ஆஃப் குட் பிலிம்ஸ்.

இயக்கம்: ஆனந்த் L ராய்.

OTT – டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்.

Atrangi Re Movie Review and Rating
Atrangi Re Movie Review and Rating

கதைச்சுருக்கம்:

காலத்தின் சூழ்நிலை காரணமாக விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொள்ளும் படத்தின் நாயகன் தனுஷ், நாயகி சாரா அலி கான். ஒருக்கட்டத்தில் ஒருவர் மேல் ஒருவர் காதல் கொள்கின்றனர். ஆனால் இவர்கள் மனதளவில் சேரும் நேரத்தில் குறுக்கே வரும் ஒரு பெரிய பிரச்சனை. என்ன பிரச்சனை? இறுதியாக இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதிக் கதை.

Atrangi Re Movie Review and Rating
Atrangi Re Movie Review and Rating

FC விமர்சனம்:

ராஞ்சனா படத்திற்கு பிறகு தனுஷ் நடிக்க, ஆனந்த் L ராய். இயக்கத்தில் ஹிந்தி படமாக உருவாகியுள்ள திரைப்படம் அட்ராங்கி ரே. இப்படம் தமிழில் கலாட்டா கல்யாணம் என்கிற பெயரில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. விமர்சனத்திற்குள் செல்வோம், நடிகர்களை பொறுத்தவரை தனுஷ், அக்ஷய் குமார், சாரா அலி கான் மூவருமே தங்களுக்கான பாத்திரங்களை நிறைவாக செய்துள்ளனர். குறும்புக்கார பையன், அதே நேரம் எமோஷனல் காட்சிகளிலும் நிறையவே ஸ்கோர் செய்துள்ளார் தனுஷ். அவருக்கு சமமாக உண்மையில் ரசிக்க வைத்துள்ளார் நடிகை சாரா அலி கான். வித்தியாசமான கதாப்பாத்திரம் அதை கேஸ்வளாக செய்து காட்டியுள்ளார் அக்ஷய் குமார்.

Atrangi Re Movie Review and Rating
Atrangi Re Movie Review and Rating

பங்கஜ் குமாரின் கலர்ஃபுல்லான ஒளிப்பதிவும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. இப்படத்தின் கதைக்களம் மற்றும் திரைக்கதை சற்று வித்தியாசமாக இருந்தாலும், திரைக்கதையில் ஆங்காங்கே ஏற்படும் தொய்வு தவிர்க்க முடியவில்லை. அதேபோல் சில காட்சிகள் சற்று புரியாமலும், சரியான பதில் இல்லாமலும் கடந்து செல்வது சிறு உறுத்தல். இறுதியாக படம் எப்படி என்றால், வித்தியாசமான கதை, கலர்ஃபுல் காட்சிகள், மனதை தொடும் இசை இதற்காக ஒருமுறை கண்டிப்பாக பார்க்கலாம் இந்த கலாட்டா கல்யாணத்தை… 

(பாராட்டுக்கள்: இசை, ஒளிப்பதிவு, தனுஷ், சாரா அலி கான்)

  Atrangi Re Movie FC Rating: 3 /5  

 

மேலும் உங்களுக்காக: 

‘ராக்கி’ திரைப்பட விமர்சனம்

’83’ திரைப்பட விமர்சனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here