இதை பார்த்தாவது கற்றுக்கொள்ளுங்கள் அஸ்வின்! ரசிகர் வேண்டுகோள்

0
Ashwin Reacts for fan's Comment

‘மான்கேடிங்’ அவுட் முறையை கூறினால் சமீபத்தில் ஞாபத்திற்கு வருவது இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். பந்துவீச்சாளர், பந்தை தன் கையிலிருந்து வீசும் முன், அவர் பக்கம் இருக்கும் பேட்ஸ்மேன் கிரீஸைத் தாண்டி வந்தால் ரன்அவுட் செய்வதே மான்கேட். மான்கேடிங் (Mankdaing) என்று சொல்லப்படும் ரன் இந்த அவுட் முறை கிரிக்கெட் விளையாட்டில் விதிமுறைகளின் படி பார்த்தால் சரி. ஆனால், அப்படிச் செய்வது போட்டி மனப்பான்மைக்கு எதிரானது என்ற கருத்தை பலரும் கூறிவருகின்றனர்.

Ashwin Reacts for fan's Comment
Ravichandran Ashwin

கடந்த வருடம் ஐபிஎல் ஆட்டத்தில், ஜாஸ் பட்லர் க்ரீஸை விட்டு வெளியேறுவதைக் கவனித்து, பந்து வீச்சுக்கு முன் அவரை ரன்அவுட் செய்தார் அஸ்வின். இது ரசிகர்களிடம் கோபத்தையும், சர்ச்சையையும் கிளப்பியது. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியின் போது ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க், பந்துவீசும் முனையில் இருந்த அடில் ரஷித் க்ரீஸை விட்டு வெளியே வந்த போது அவரை ரன் அவுட் செய்யாமல் எச்சரித்தார்.

Ashwin Reacts for fan's Comment
Ashwin Reacts for fan’s Comment

இந்த புகைப்படத்தை ரசிகர் ஒருவர் “கற்றுக் கொள்ளுங்கள் அஸ்வின். இப்படித்தான் விளையாட வேண்டும்” என்று அஸ்வினைக் குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார்.  இதற்குப் பதிலளித்துள்ள அஸ்வின், “எனக்கு நியாயமாகச் சண்டையிடுவது பிடிக்கும். ஆனால் நாளை மறுநாள் வரை காத்திருங்கள். நான் இது குறித்து உங்களிடம் பேசுகிறேன். எனக்கென ஒரு நாள் ஓய்வு கொடுத்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Twitter Feed: 

தற்போதைய செய்திகள்:-

‘என் பெயர் பயன்படுத்தி வருபவர்களை நம்ப வேண்டாம்’ அஜித் குமார்!

⮕ அனுஷ்காவின் ‘நிசப்தம்’ திரைப்படம் OTT-ல் வெளியீடு?

ஆர்டர் செய்தது ஆப்பிள் வாட்ச், ஆனால் வந்தது? இசையமைப்பாளருக்கு நிகழ்ந்த ஏமாற்றம்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...