‘Article 15’ படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி & அருண்ராஜா காமராஜ்

0
Article 15 Movie Tamil Remake Announcement

பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் வெளியாகி வெற்றிப்பெற்ற படம் ஆர்டிகிள் 15.

Article 15 Movie Tamil Remake Announcement
Article 15 Movie Tamil Remake Announcement

அழுத்தமான கதைக்களம், அலட்டல் இல்லாத நடிப்பு என விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட திரைப்படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை தயாரிக்கும் போனிகபூர், இப்படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளார். தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க, கனா இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கவுள்ளார். மேலும், இந்தப் படத்தினை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. மற்ற நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Twitter Feed:

 

OTT-ல் வெளியாகும் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…