ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான சிவா மனசுல ஷக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுயா.


இப்படத்தைத் தொடர்ந்து மதுரை சம்பவம், நகரம், நண்பன், நான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்பாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார் எனினும் அது பெரிய விளம்பரத்தை இவருக்கு கொடுக்கவில்லை இதனால் வாய்ப்புகள் ஏதுமின்றி சினிமாவிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் முக்கிய பாத்திரத்தில்(இலியானாவின் அக்காவாக) நடித்திருப்பார் அனுயா. அப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, ” நண்பன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நான் நிறைமாத கர்பிணி எனக்கு விஜய் தான் பிரசவம் பார்ப்பது போல் காட்சி. அதில் விஜய் கன்னத்தில் அறைவது போல் சீன், விஜய்யை அறையும் காட்சியில் நடிக்க அனுயா தயங்கியிருக்கிறார். வளர்ந்து வந்த நடிகையான தான் எப்படி முன்னணி ஹீரோவான விஜய்யை அடிப்பது என்பதே அனுயாவின் தயக்கம்.
ஏனென்றால் விஜய் முன்னணி நடிகர் அனுயா வளர்ந்து வரும் நடிகை அப்படி இருக்க எப்படி ரசிகர்கள் ஏற்றுகொள்வார்களா? என பல குழப்பமே தாக்கத்திற்கு காரணம். இருந்தாலும் மனதை தைரியபடுத்தி லைட்டாக கன்னத்தில் அறைந்தேன். விஜய் சாருக்கும், ஷங்கர் சாருக்கும் அதிருப்தி அடைந்து என்னமா நல்ல நடிகையான நீங்கள் இப்படி பண்ணலாமா என்று கேட்க, தனது தயக்கத்தை கூறியுள்ளார். அப்போது ஷங்கர் சார் கூறியது ‘இங்கிருப்பது விஜய்யே அல்ல பஞ்சவன் பாரிவேந்தன். அதனால் விஜய்யை மறந்துவிட்டு பாரிவேந்தனை நல்லா ஓங்கி அறைங்க பார்ப்போம்’ என கூறினார். அவர் கொடுத்த தைரியத்தில் விஜய்யின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருக்கிறார் அனுயா. அடிவாங்கிய விஜய் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. அவருக்கு அந்த காட்சி தத்ரூபமாக வர வேண்டும், அவ்வளவு தான். மேலும் அனுயா விஜய்யை அடித்ததை அவரின் ரசிகர்களும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காரணம் அது நடிப்பு” என நண்பன் படத்தில் தனது அனுபவத்தை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.
———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்
👉 ஜோதிகா, கீர்த்தி சுரேஷை தொடர்ந்து OTT -ல் வெளியாகும் வரலக்ஷ்மியின் திரைப்படம்!
👉 சாய் பல்லவி நடித்தால் நான் விலகி கொள்கிறேன் ராஷ்மிகா!
👉 புல்லட் ஓட்ட கற்றுக்கொள்ளும் போது தவறி விழுந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்!
👉 சுஷாந்த் சிங் நடித்த கடைசி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி!
👉 சமந்தா முத்தமிட்ட நபருக்கு கொரோனா பாதிப்பு? உண்மை நிலவரம்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...