Anushka Shetty’s Nishabdham Release on OTT
தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள நிசப்தம் படத்தை பிரபல OTT நிறுவனம் பெரும் விலைக் கொடுத்து வாங்கியுள்ளது.


ஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நிசப்தம். தமிழில் நிசப்தம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட 5 மொழிகளில் சைலன்ஸ் என்கிற பெயரில் வெளியாகவுள்ளது. மேலும் இப்படத்தில், அனுஷ்கா காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத் திறனாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த சம்மரில் வெளியாகவிருந்த இப்படம் கொரோனா லாக்டவுனால் தள்ளிவைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தை பிரபல OTT தளமான அமேசான் பிரைம் நிறுவனம் பெருந்தொகை கொடுத்து வாங்கியுள்ளதாம். மேலும், அடுத்த மாதம் இப்படத்தை ஓடிடியில் வெளியிட திட்டமிட்டு உள்ளார்களாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீட் தேர்வு குறித்து சூர்யா அதிரடி அறிக்கை!
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...