பாலிவுட்டில் தொடர்ந்து அபத்தமான, தவறான சம்பவங்கள் சமீப காலமாக செய்திகளாக வந்துக்கொண்டிருக்கிறது. சுஷாந்த் இறப்பில் துவங்கி, நேபோட்டிசம், மாஃபியா, போதைப்பொருள் அந்த வரிசையில் மீண்டும் பாலியல் குற்றச்சாட்டு என பாலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கி வருகிறது. இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னிடம் அத்துமீறி நடந்ததாக நடிகை பாயல் கோஷ் குற்றம் சாட்டியுள்ளார். இதுக்குறித்து பாயல் கோஷ் கூறியுள்ளதாவது, “அனுராக் காஷ்யப் என்னிடம் அத்துமீறி மிகவும் மோசமான முறையில் நடந்தார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, இந்த புத்திசாலி மனிதருக்கு பின்னால் இருக்கும் தீய சக்தியை நாட்டு மக்கள் பார்க்கும் வகையில் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனால் எனக்கும் என் பாதுகாப்பும் அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை நான் அறிவேன். தயவு செய்து உதவுங்கள்” என டுவீட் செய்திருந்தார்.


இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, தனது மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுக்கு அனுராக் காஷ்யப் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “ஆஹா, நீங்கள் நீண்ட காலமாக என்னை மௌனமாக்க முயன்றீர்கள். எந்த பிரச்சினையும் இல்லை. என்னை மௌனமாக்கும் போது, மற்றவர்களும் பொய்யில் சிக்கிக் கொள்ளும் அளவுக்கு நீங்கள் பொய் சொல்லிக்கொண்டே இருந்தீர்கள். கொஞ்சம் கண்ணியமாக இருங்கள் மேடம். நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், என் மீதான குற்றச் சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை, ”என்று அவர் ட்வீட் செய்துள்ளார். அவரது அடுத்த ட்வீட், “என் மீதான குற்றச்சாட்டில் நீங்கள் என்னுடன் பணியாற்றிய வர்களையும் பச்சன் குடும்பத்தினரையும் இழுக்க முயன்று தோல்வி அடைந்துள்ளீர்கள்.


மேடம், நான் இரண்டு முறை திருமணம் செய்துள்ளேன். அது என் குற்றமென்றால் ஏற்றுக்கொள்கிறேன். அதோடு நிறைய அன்பு செலுத்தியதையும் ஏற்றுக் கொள்கிறேன். யாரிடமும் ஒரு போதும் தவறாக நடந்து கொண்டது இல்லை. அது போன்ற செயல்களை ஊக்குவிப்பதும் இல்லை. உங்கள் வீடியோவை பார்க்கும்போது அதில் எவ்வளவு உண்மை, எவ்வளவு பொய் இருக்கிறது என்பது தெரிய வருகிறது. நீங்கள் ஆங்கிலத்தில் பேசி இருந்தாலும் இந்தியில் பதில் சொல்வதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என இயக்குனர் அனுராக் காஷ்யப் கூறியுள்ளார்.
தற்போதைய செய்திகள்:- ⮕ ஐபிஎல் தொடரில் கேப்டன் தோனியின் முதல் விக்கெட்! ⮕ தோனி சந்தித்த முதல் பந்தில் அவுட் கொடுத்த அம்பயர்! தோனி ரிவ்யூ சிஸ்டம் ⮕ ‘ரகிட ரகிட ஊ’ ஹர்பஜன்சிங்கின் ட்ரேட்மார்க் பாராட்டு |
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...