‘கும்பலாங்கி நைட்ஸ்’, ஹெலன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மலையாள நடிகை அன்னா பெண், இவர் கேரளாவில் உள்ள பிரபல மாலில் ஷாப்பிங் செய்தபோது இரண்டு பேர் என்னை கடந்து சென்றபோது அதில் ஒருவர் என் பின் பக்கத்தில் கை வைத்து விட்டு சென்றார். அதற்கு நான் உடனே எதிர்வினையாற்ற முயன்றேன். ஒருவேளை தெரியாமல் பட்டிருக்குமோ என்று விட்டு விட்டேன். ஆனால் யோசித்துப் பார்த்தபோது அது திட்டமிட்டு செய்ததாகவே தற்போது தெரிகிறது.


மேலும், தொடர்ந்து என்னை பின்தொடர்ந்த அந்த நபர்கள் என் அம்மா வருவதைக் கண்டு சென்று விட்டார்கள். தவறான எண்ணம் கொண்ட ஆண்கள், பெண்களின் பாதுகாப்பை பறித்துக் கொள்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை என்றால் இதேபோல் மீண்டும் மீண்டும் நடக்கும் என்பதால் சொல்கிறேன். தவறு செய்தவரின் கன்னத்தில் ஓங்கி அறைய எனக்கு தைரியம் இல்லை. என்றாலும் தைரியமுள்ள பெண்கள் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். என்று உருக்கமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...