காட்டில் நாய்களுக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட ஆண்ட்ரியா! நோ என்ட்ரி

0
Andrea trapped among the dogs in the forest! No Entry Special
Andrea trapped among the dogs in the forest! No Entry Special

காட்டில் நாய்களுக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட ஆண்ட்ரியா! நோ என்ட்ரி: தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும் கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்துவரும் நடிகை ஆண்ட்ரியா தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘நோ என்ட்ரி’.

அறிமுக இயக்குனர் அழகு கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தை ஜம்போ சினிமா நிறுவனம் தயாரித்துள்ளது. திரில்லர் கதையாக உருவாகிவரும் இப்படத்தை பற்றி இயக்குனர் அழகுகார்த்திக் கூறியதாவது, “மேகாலயாவில் 3,200 படிகளுக்கு கீழே, சில மலைகளுக்கு நடுவே , பள்ளத்தாக்கில் பாய்ந்தோடும் நதிக்கு மேலே கட்டப்பட்ட அதிசய பாலத்தை ‘நோ என்ட்ரி’ படத்தில் பார்க்கலாம்.

Andrea trapped among the dogs in the forest! No Entry Special
Andrea trapped among the dogs in the forest! No Entry Special

இரண்டு மரங்களின் வேர்களை பின்னி, பழங்காலத்தில் வாழ்ந்த பாரம்பரிய மனிதர்கள் இந்த பாலத்தை கட்டி இருக்கிறார்கள். இந்த அதிசயத்தை ‘நோ என்ட்ரி’ படத்தில் பார்க்கலாம். மேலும் காட்டுக்கு நடுவே கட்டப்பட்ட மூங்கில் வீட்டில், முரட்டு நாய்களுக்கு மத்தியில் ஆண்ட்ரியா மாட்டிக் கொண்ட காட்சி, திகிலாக படமாக்கப்பட்டு இருக்கிறது. அந்த நாய்களிடம் இருந்து ஆண்ட்ரியா தப்பி ஓடுவதும், ஆண்ட்ரியாவுக்கும், நாய்களுக்கும் இடையே நடக்கும் சண்டை காட்சியும் பரபரப்பாக படமாக்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

👉 ‘டாணாக்காரன்’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்