‘ஆனந்தம் விளையாடும் வீடு’ திரைப்பட விமர்சனம்

0
Anandham Vilayadum Veedu Movie Review and Rating
Anandham Vilayadum Veedu Movie Review and Rating

‘ஆனந்தம் விளையாடும் வீடு’ திரைப்பட விமர்சனம்

படக்குழு:

நடிகர்கள்: கௌதம் கார்த்திக், சேரன், ஷிவாத்மிகா, சரவணன் மற்றும் பலர்.

இசை: சித்து குமார்

ஒளிப்பதிவு: போரா பாலபரணி 

எடிட்டிங்: N.B.ஸ்ரீகாந்த்

தயாரிப்பு: ஸ்ரீ வாரி ஃபிலிம்

இயக்கம்: நந்தா பெரியசாமி.

Anandham Vilayadum Veedu Movie Review and Rating
Anandham Vilayadum Veedu Movie Review and Rating

கதைச்சுருக்கம்:

ஆனந்தம் விளையாடும் வீடு இப்படத்தின் டைட்டிலையும், போஸ்டர்களையும் பார்த்தாலே தெரியும் இது மிகப்பெரிய சொந்த பந்தங்கள் நிறைந்த குடும்பப்படம் என்று, ஆம் அதுதான். கதைப்படி ஊரில் பார்ப்பவர்கள் கண் படுமளவு ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நாயகனின் குடும்பம், இவர்கள் அனைவரும் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக வாழ ஒரு பெரிய வீடு கட்ட முடிவு செய்கிறார்கள். இதை பார்த்து காண்டாகும்  வில்லன் இவர்களை பிரிக்கவும், அந்த வீட்டைக் கட்டவிடாமல் தடுக்கவும் தடைகளை ஏற்படுத்துகிறான். இறுதியாக இந்த ஆனந்த குடும்பம் பிரிந்ததா? சேர்ந்ததா? நினைத்தது போல வீடு கட்டினார்களா? என்பதே மீதிக் கதை.

Anandham Vilayadum Veedu Movie Review and Rating
Anandham Vilayadum Veedu Movie Review and Rating

FC விமர்சனம்:

நந்தா பெரியசாமி இயக்கத்தில் மிக பெரிய நட்சத்திர பட்டாளங்களைக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. சரி, விமர்சனத்திற்குள் செல்வோம். நடிகர்களை பொறுத்தவரை தனித்தனியா சொன்னால் தாங்காது, ஒட்டுமொத்தமாகவே சிறப்பான நடிப்பை அனைவரும் கொடுத்துள்ளனர். இவர்கள் அனைவரையும் திட்டமிட்டபடி வைத்து வேலை வாங்கிய இயக்குனருக்கு பெரிய பாராட்டுக்கள். சேரன், சரவணனுக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் கௌதம் கார்த்திக்கிற்கு இல்லை என்பதே உண்மை.  

Anandham Vilayadum Veedu Movie Review and Rating
Anandham Vilayadum Veedu Movie Review and Rating

போரா பாலபரணியின் அழகான ஒளிப்பதிவும், சித்து குமாரின் இசையும் பலம். இந்தக் கதைக்கு என்ன தேவையோ அதை நிறைவாகவே கொடுத்துள்ளனர் இருவரும். இப்படத்தில் நிறைய கதாப்பாத்திரங்கள் இருந்ததாலோ என்னவோ எந்தவொரு கதாப்பாதிரமும் அழுத்தமாக இல்லை, இதனால் நம்முடன் அதிகம் ஒட்டாமல் செல்கின்றனர். உண்மையில் சொல்லப்போனால் சீரியல் பார்க்கும் உணர்வுதான் அதிகம் வருகிறது. வில்லன் கதாப்பத்திரமும் கூட பெரிதளவு ஈர்ப்பைக் கொடுக்கவில்லை, இத்தனைக்கும் டேனியல் பாலாஜி முக்கிய வில்லன். காட்சிகளை பொறுத்தவரையும் நாம் பார்த்து சலித்த, பழைய டெம்பிளேட் ரகம்தான், இதுபோக பல லாகிஜ் மீறல்கள் இவையெல்லாமே நமக்கு பெருமளவு சோர்வை தருகிறது. இறுதியாக படம் எப்படி என்றால், இதற்கு டிவி நாடகமே தேவலாம்டா சாமி! என்கிற மனவோட்டம் தான் இறுதியான பதிலாக தோன்றுகிறது, பிறகு உங்கள் விருப்பம். 

(பாராட்டுக்கள்: ஒளிப்பதிவு, இசை)

  Anandham Vilayadum Veedu Movie FC Rating – 2 /5  

மேலும் உங்களுக்காக: 

‘ராக்கி’ திரைப்பட விமர்சனம்

’83’ திரைப்பட விமர்சனம்

கலாட்டா கல்யாணம் (அட்ராங்கி ரே) திரைப்பட விமர்சனம்

‘பிளட் மணி’ திரைப்பட விமர்சனம்

‘ரைட்டர்’ திரைப்பட விமர்சனம்

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here