பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

0
Amitabh Bachchan Tested Positive For Corona virus

நாடெங்கிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனாவுடன் கடந்த பிப்ரவரி மாதம் துவங்கிய போராட்டம் இன்று வரை முடிவில்லா பயணமாக நீண்டுக்கொண்டே செல்கிறது.

Amitabh Bachchan Tested Positive For Corona virus

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அவர் மும்பையின் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுக்குறித்த தகவலை அமிதாப்பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “நான் கொரோனா பரிசோதனை செய்தேன், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன். மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கிறேன். குடும்பத்தினர் மற்றும் ஊழியர்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர், முடிவுகள் காத்திருக்கின்றன. கடந்த 10 நாட்களில் எனக்கு நெருக்கமாக இருந்த அனைவருமே தயவுசெய்து பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என கூறியுள்ளார். நடிகர்கள் துவங்கி கிரிக்கெட் வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் அமிதாப்பச்சன் குணமடைந்து வரவேண்டும் என தங்களது வேண்டுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

—————————மேலும் உங்கள் பார்வைக்கு—————————–

 

எங்களது யூடியூப் சேனலை பார்க்க, படித்திருந்தால் SUBSCRIBE செய்யவும்…

 * புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி சரத்குமார்

* மருத்துவமனையில் நடிகர் பொன்னம்பலம் உதவிக்கரம் நீட்டிய கமல்ஹாசன்!

* சிவப்பு உடையில் பளபளக்கும் அழகு! சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் படங்கள்

* 50 சதவிகித சம்பளத்தை குறைத்து கொண்ட ரகுல் ப்ரீத் சிங்!

* அனுபமா பரமேஸ்வரன் லேட்டஸ்ட் அழகிய படங்கள்

* த்ரிஷாவை எச்சரித்த மீரா மிதுன்! ஏன் எப்படி என ரசிகர்கள் காட்டம்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…