பிரபு சாலமனின் ‘மைனா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை அமலா பால். இப்படத்தைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிசியான ஹீரோயினாக வலம்வரத் துவங்கினார்.
தமிழில் விஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தற்போதைய சூழலில் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த, பேசப்படக்கூடிய கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் அமலா நடிப்பில் கடைசியாக வெளியான ஆடை திரைப்படம் இவருக்கு பாராட்டுக்களை பெற்றுத் தந்தது. இப்படத்தைத் தொடர்ந்து தற்போது தமிழில் ‘அதோ அந்த பறவை போல’, கடாவர், தெலுங்கில் லஸ்ட் ஸ்டோரீஸ் ரீமேக் மற்றும் மலையாளத்தில் பிரித்விராஜூடன் ஆடுஜீவிதம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அமலா பால் அவ்வபோது தனது படங்களை பதிவேற்றி லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள பிகினி படங்களும் லைக்குகளை குவித்து வருகிறது. டென்ட் வீடு ஒன்றில் பிகினியுடன் இருக்கும் படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றியுள்ளார், இப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்
👉 வேஷ்டி சட்டையில் மாஸ் காட்டும் நடிகை ஷெரின்! வைரல் படங்கள்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...