தென்னிந்திய நடிகைகளில் ஒருவரான அமலா பால் பதிவிட்ட புகைப்படம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.


இணையத்தில் வைரலாகும் மாளவிகா மோகனனின் நீச்சல் உடை புகைப்படம்!
சிந்து சமவெளி சர்ச்சை படத்தில் அறிமுகமாகிய அமலா பால், மைனா படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில், முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அவ்வபோது ஏதாவது ஒரு சர்ச்சையிலோ, பரபரப்பிலோ சிக்கி கொள்வது இவரது வழக்கம். அந்த வகையில் தற்போது புகைப்பிடித்து வாயில் இருந்து வரும் புகையை வட்டமாக வெளியிடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். மேலும் அந்த படத்துடன் “எல்லா நற்பண்புகளும் சலவை செய்த துணிபோல் இல்லை. எல்லா புனிதர்களுக்கும் ஒளிவட்டம் இல்லை. எல்லா பாவிகள் கையிலும் ரத்தம் இல்லை”. என்றெல்லாம் தத்துவ பதிவையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்டித்தும், புகைப்புடிக்கும் அமலாபாலுக்கு எதிராக ரசிகர்கள் பலரும் வலைத்தளத்தில் கண்டன பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.


மேலும் உங்கள் பார்வைக்கு:
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...