காதலரை பிரிந்த நடிகை அமலா பால்! FC சினி பிட்ஸ் | Amala Paul

0
Amala Paul Breaks her relationship

மைனா படத்தின் கதாநாயகியாக பிரபலமானவர் அமலா பால். அதன்பின் தமிழ், தெலுங்கு என பிசியாக இருந்த அமலா பால், இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்தார். சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். இதையடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அமலா பால் பஞ்சாப்பை சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங் என்பவரை அமலா பால் காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து வீடியோ இசை ஆல்பம் ஒன்றில் நடிதுள்ளனர், அதில் அதில் பஞ்சாபி முறைப்படி இவர்கள் திருமணம் செய்யும் காட்சியை வெளியிட்டு தங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதாக தகவல் வெளியிட்டிருந்தார் பவ்னிந்தர் சிங். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அமலா பால் இது தொடர்பாக பவ்னிந்தர் சிங் மீது நீதிமன்றத்தில் அமலா பால் வழக்கும் தொடர்ந்துவிட்டார். இதையடுத்து அவர் பவ்னிந்தர் சிங்கை பிரிந்துவிட்டதாகவும் மறுமணம் செய்யும் திட்டத்தை கைவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…