மனிதாபிமானம் இல்லாத அமலா பால்! மேக்கப் கலைஞர் குற்றசாட்டு

0
Allegation against Actress Amala Paul
Allegation against Actress Amala Paul

மனிதாபிமானம் இல்லாத அமலா பால்! மேக்கப் கலைஞர் குற்றசாட்டு:

பாலிவுட் மேக்கப் கலைஞர் ஹேமா நடிகை அமலா பால் குறித்து குற்றசாட்டை முன்வைத்துள்ளார். இந்தி யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் “சென்னையில் ஒருமுறை நடிகை அமலா பாலுடன் படப்பிடிப்பிற்கு சென்றேன். ஏப்ரல், மே மாதத்தில் கடும் வெயிலில் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றது. நாங்கள் சென்ற இடத்தில் கொஞ்ச நேரம் நிழலில் உட்காரலாம் என்றால் கூட ஒரு செடியோ, மரமோ இல்லை. அதனால் கேரவேனுக்குள் உட்கார்ந்து கொண்டோம். ஆனால் நான் உட்கார்ந்த உடனே அமலா பால் தனது மானேஜரை அழைத்து என்னை வேனை விட்டு வெளியேறும்படி சொல்லி அனுப்பினார். நானும் இன்னும் சிலரும் அங்கு உட்கார்ந்திருந்தோம்.

Allegation against Actress Amala Paul
Allegation against Actress Amala Paul

இவ்வளவு கடுமையான வெயிலில் எங்கு போய் நிற்பது என்று யோசித்தோம். ஆனால் நாங்கள் இறங்கும் வரை அவர் விடவில்லை. அதனால் வேனை விட்டு இறங்கினோம். அப்படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை இதுபோல் பல சம்பவங்கள் எனக்கு நடந்தது. நான் பல ஸ்டார் நடிகைகளுக்கு மேக்கப் போட்டு இருக்கிறேன். அவர்கள் அனைவரும் என்னிடம் மிகவும் கனிவாக நடந்து கொள்வார்கள். நடிகை தபு எங்களை போன்ற கலைஞர்களுக்காக வேன் எல்லாம் கூட புக் செய்து நன்றாக பார்த்துக் கொண்டார்.

Allegation against Actress Amala Paul
Allegation against Actress Amala Paul

ஆனால், அமலா பால் கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் எங்களிடம் நடந்து கொண்டார். கேமரா முன் நடிக்கும் நடிகர்களை அழகாக காமிப்பதற்கு எங்களது முழு உழைப்பை நாங்கள் தருகிறோம், திரைத்துறையில் நாங்களும் முக்கிய பங்கை வகிக்கிறோம், இருந்தாலும் பல நேரங்களில் அவர்களுக்கு உரிய மரியாதையோ, அங்கீகாரமோ கொடுக்கப்படுவது இல்லை” என உருக்கமாக தனது ஆதங்கத்தை பகிர்ந்துள்ளார்.

தவறவிடாதீர்!

விஜயுடன் 4வது முறையாக ஜோடி சேரும் பிரபல நடிகை!

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0