மாமன்ற உறுப்பினர் ஆலப்பாக்கம் சண்முகம் மாரடைப்பால் மரணம்:
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் இன்று அமைதி பேரணியில் ஈடுபட்டனர்.


இந்த பேரணியில் பங்கேற்ற சென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், 146வது வார்டு மாமன்ற உறுப்பினருமான ஆலப்பாக்கம் சண்முகத்திற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அப்போது அவரை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். கலைஞரின் நினைவு நாளில், அமைதிப்பேரணியில் பங்கேற்றபோது திமுக வார்டு உறுப்பினர் உயிரிழந்த சம்பவம் கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண