பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்ஷய் குமார், ‘நான் தினமும் கோமியம் குடிக்கிறேன்’ என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தமிழில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தில் பக்ஷி ராஜனாக நடித்தவர் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். ஹிந்தியில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ‘லக்ஷ்மி பாம்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாகவுள்ளது. டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியில் அக்ஷய் குமார் அதில் கலந்து கொண்டுள்ளார்.


இந்நிகழ்ச்சியின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது, அதில் பியர் கிரில்ஸ் தனக்கு யானை சாணத்தில் டீ போட்டுக் கொடுத்ததாக அக்ஷய் குமார் தெரிவித்தார். இந்நிலையில் பியர் கிரில்ஸ், அக்ஷய் குமார் மற்றும் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி ஆகியோர் சமூக வலைதளத்தில் லைவ் வீடியோ சாட் செய்தனர். அப்போது, யானை சாணத்தில் போட்ட டீயை எப்படித் தான் குடித்தீர்களோ என்று ஹூமா, அக்ஷய் குமாரிடம் கேட்டார். அதற்கு அக்ஷய் குமார் அளித்த பதில் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அவர் கூறியதாவது, நான் தினமும் மாட்டுக் கோமியம் குடிப்பதால், யானை சாண டீ எனக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை என்றார். ஆயுர்வேத காரணங்களுக்காக தான் தினமும் கோமியத்தை குடிப்பதாக அவர் கூறினார்.
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...