‘AK62’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது தெரியுமா! டைட்டிலும் ரெடி?
துணிவு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் அடுத்ததாக லைகா நிறுவனம் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் விக்னேஷ் சிவன் சொன்ன முழுக் கதையில் அஜித்திற்கும், லைகாவுக்கும் திருப்தி இல்லாததால் அவரை படத்திலிருந்து நீக்கி, மகிழ் திருமேனிக்கு வாய்ப்பளித்தனர்.


ஆனால் இன்னும் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் மே 1-ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாள் முன்னிட்டு AK62 படத்தின் தலைப்பை வெளியிடுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், ‘விடாமுயற்சி’ என இப்படத்திற்கு தலைப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்று இரவு அல்லது நாளை காலை இந்த அறிவிப்பு வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்…
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…