அஜித்தின் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு எப்போது வெளியான சுவாரஸ்ய தகவல்: அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.


பெரும் பொருட் செலவில் உருவாகவுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியும் ஷூட்டிங் துவங்கியபாடில்லை. இந்நிலையில், இதுக்குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் புனேவில் துவங்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…