அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு: துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘விடாமுயற்சி’ என டைட்டில் வைத்துள்ளனர். அஜித் பிறந்தநாளான இன்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளார். மற்ற நடிகர் நடிகைகள் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…