“பெரிய லட்சியங்களை அடைய முயலுங்கள்” அஜித் வேண்டுகோள்: அஜித் அவ்வபோது தனக்கு சொல்ல தோன்றும் கருத்துக்களை தனது மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலம் தெரியப்படுத்துவார். அந்த வகையில் சமீபத்தில் தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் வகையில் செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் கூறியுள்ளதாவது, “உங்களை சுற்றி பாசிட்டிவான நபர்களையும், உங்களை ஊக்கப்படுத்தும் நபர்களை மட்டுமே வைத்துக் கொள்ளுங்கள். நெகட்டிவிட்டி வேண்டாம், பெரிய லட்சியங்களை அடைய முயலுங்கள். வாழு வாழவிடு – அஜித் குமார்” என கூறியுள்ளார்.
வரும் பொங்கலுக்கு அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு இரண்டு படங்கள் மோதவுள்ளதால் விஜய், அஜித் ரசிகர்கள் மத்தியில் இணைய போர் நடைபெற்று வருகிறது. இதை கருத்தில்கொண்டு இந்த கருத்தை கூறியிருப்பார் என தோன்றுகிறது.

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE