ஐஸ்வர்யா ராஜேஷின் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் ரிலீஸ் தேதி இதோ: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது வத்திக்குச்சி’ பட இயக்குனர் கிங்ஸ்லின் இயக்கத்தில் டிரைவர் ஜமுனா என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தை 18 ரீல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் வரும் நவம்பர் 11ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இப்படத்திற்கான சென்சார் பணிகள் முடிந்து U/A சான்றிதழ் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE