தமிழ் சினிமாவில் தற்போதைய சூழலில் எந்தவொரு கதாப்பாத்திரத்திற்கும் பொருத்தம் என கூறும் ஒரு சில கதாநாயகிகளில் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். ஏனெனில் காக்கா முட்டை, தர்மதுரை, கனா, நம்ம வீட்டு பிள்ளை என அவர் தேர்வு செய்த பாத்திரங்கள் ஒவ்வொன்றும் கவனிக்கும்படியாக அமைந்தது. அந்த வகையில் தற்போது விருமாண்டி இயக்கத்தில் க/பெ ரணசிங்கம் என்கிற படத்தில் நடித்துள்ளார். கண்டிப்பாக இதுவும் பேசப்படும் கதாப்பாத்திரமாக இருக்குமென திரைத்துறையில் பேசப்பட்டு வருகிறது.


இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவரின் கமென்ட் ஐஸ்வர்யா ராஜேஷை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் இவர் பதிவிட்ட புகைப்படத்தின் கமெண்டில் உங்களுடைய தீவிர ரசிகன் நான். உங்களுக்காக நான் உயிரை விடவும் தயார்’ என ரசிகர் ஒருவர் கூறியிருந்தார். இதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் “உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. ஆனால் தயவுசெய்து இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். வாழ்க்கை என்பது சாவதற்கு இல்லை. நான் என்றும் உங்கள் நண்பராக இருப்பேன். எனவே இதுபோன்ற வார்த்தைகளை மீண்டும் சொல்ல மாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்யுங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்
👉 சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’ பட பிரத்யேக படங்கள்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…